spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edappadi
 

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று இந்த அரசால் அறிவிக்கப்பட்டதாகவும், இந்த நிலையில், குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக (டேன்டீ-TANTEA) தொழிளாளர்களுக்கு இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மீது சி.ஏ.ஜி. புகார்

தீபாவளிக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில் உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை டேன்டீ தொழிளாளர்களுக்கு வழங்குமாறு திமுக அரசை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

MUST READ