Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் டிஸ்னியால் அவதாருக்கு எதிர்ப்பு...

தமிழகத்தில் டிஸ்னியால் அவதாருக்கு எதிர்ப்பு…

-

ஜேம்ஸ் கேமரூன் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பிரம்மாண்டமாக இயக்கிய டெர்மினேட்டர், அவதார் 1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் பாகம் 2 : தி வே ஆப் வாட்டர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. தற்போது உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் 160 மொழிகளில் வெளியானது அவதாரின் இரண்டாம் பாகம்.

அவதாரின் இரண்டாம் பாகத்தை நடிகர் சிம்பு தாய்லாந்தில் பார்த்தவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு கைதட்டுவது போன்ற எமோஜியை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ள அவதார் திரைப்படத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவதார் 2 படத்தை திரையரங்கில் விநியோகம் செய்யும் டிஸ்னி ஸ்டூடியோஸ், 70 சதவீதம் பங்கு கேட்டதாக கூறப்படுகிறது. அதில் உடன்பாடு இல்லாத திரையரங்க உரிமையாளர்கள் படம் ரிலீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சென்னையில் பல்வேறு திரையரங்குகள் அவதார் படத்தை திரையிட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் தமிழ்நாட்டில் அவதார் 2 திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையின் பிரபல திரையரங்குகளான வெற்றி தியோட்டர், ஜிகே சினிமாஸ், ஏஜிஎஸ் சினிமாஸ் உள்ளிட்டவை படத்தின் அதிகாலை காட்சியை திரையிடவில்லை. இவை அனைத்தும், அவதார் 2 படத்தை திரையிடுவோம் என்று கூறியிருந்தனர்.

தற்போது ஏஜிஎஸ் சினிமாஸ் மட்டும் அவதார் 2 படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது.  

இதுகுறித்து, சென்னை போரூர் ஜிகே சினிமாஸ், நிர்வாக இயக்குநர் ரூபன் மதிவாணன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இந்த படத்தை (அவதார் 2) திரையிடுவதற்கு செய்த முதலீடுகள் அனைத்தும் வீணாகிவிட்டன என பதிவிட்டுள்ளார்.

அவதார் 2 படம் வெளியாவதால், புதிய தமிழ் படங்கள் ஏதும் இன்று வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ