Homeசெய்திகள்தமிழ்நாடுஜூன் 2024-ஆம் மாத ரேஷன் பொருட்கள் ஜூலையில் வழங்கல்

ஜூன் 2024-ஆம் மாத ரேஷன் பொருட்கள் ஜூலையில் வழங்கல்

-

- Advertisement -

தமிழ்நாடு அரசு சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் வாயிலாக  2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூபாய்.30 க்கும் மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ரூபாய்.25 க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.ஜூன் 2024-ஆம் மாத ரேஷன் பொருட்கள் ஜூலையில் வழங்கல்இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் மே 2024-ஆம் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவை கிடைக்கவில்லை எனில் ஜூன் 2024-ஆம் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/eps-statement-10/96517

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதம் தோறும் வழங்கி வந்த ரேஷன் பொருட்கள் வினியோகம் கடந்த இரண்டு மாதங்களாக தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது அதன் படி மே 2024-ஆம் மாதம் வழங்க வேண்டிய பாமாயில் துவரம் பருப்பு ஜூன் 2024-ஆம் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 2024-ஆம் மாதத்திற்கான பாமாயில் துவரம் பருப்பு ஜூலை 2024-ஆம் மாதத்தில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.ஜூன் 2024-ஆம் மாத ரேஷன் பொருட்கள் ஜூலையில் வழங்கல்ஜூன் 2024-ஆம் மாத பொருட்களை ஜூலை 2024-ஆம் தேதியில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024-ஆம் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024-ஆம் மாத துவக்கத்திலிருந்து மாதம்  முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ