spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்!

5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்!

-

- Advertisement -

 

we-r-hiring

மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். அத்துடன், மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடர்பான வழக்கில், விசாரணைக்கு அமலாக்கத்துறை முன் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.

ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!

மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ