spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு- 8 நிமிடத்தில் தீர்ந்த டிக்கெட்டுகள்

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு- 8 நிமிடத்தில் தீர்ந்த டிக்கெட்டுகள்

-

- Advertisement -

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு- 8 நிமிடத்தில் தீர்ந்த டிக்கெட்டுகள்

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்.

ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!
File Photo

அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ஆம் தேதி பயணம் செய்வதற்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ரயில்வே நிலைய கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 9ஆம் தேதி ரயிலில் பயணிக்க பெரும்பலான் தென் மாவட்ட இரயில்களில் இரண்டாம் வசதி படுக்கை டிக்கெட் 8 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கான செல்லக்கூடிய. விரைவு இரயில்களான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ்,பொதிகை எக்ஸ்பிரஸ்,பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன. நவம்பர் 10 தேதிக்கு நாளையும், நவம்பர் 11 ம் தேதி பயணத்திற்கு ஜூலை 14 ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

we-r-hiring

கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

MUST READ