முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
“46 மருந்துகள் தரமற்றவை”- மத்திய அரசின் பகீர் தகவல்!
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ” மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பர். தமிழர் உரிமையை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்; இதுவே தேர்தல் முழக்கம்.
தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அ.தி.மு.க. பாடுபடும். தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 35- க்கும் அதிகமான எம்.பி.க்கள் செய்தது என்ன? தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் தமிழக மக்கள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள்; இதுவரை அதன் ரகசியத்தை ஏன் வெளியிடவில்லை.
காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!
தி.மு.க.வின் 38 எம்.பி.க்களும் இதுவரை 9,695 கேள்விகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் இருந்த நேரத்தில் சுமார் 14,200 கேள்வி கேட்கப்பட்டன. நாட்டு மக்களை விட்டுவிட்டு வீட்டு மக்களுக்கு மட்டுமே தி.மு.க. உழைக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.