spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

-

- Advertisement -

தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணித்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்த நிலையில, அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து காணொலி மூலம் இன்று இரவு தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

we-r-hiring

இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு,  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடிடுவது குறித்தும், முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை வெற்றி பெற செய்திட ஒருங்கிணைப்புக் குழு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்டப் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

MUST READ