Homeசெய்திகள்தமிழ்நாடுகாஞ்சிபுரத்தில் செப்.28-ல் திமுக பவள விழா பொதுக்கூட்டம்

காஞ்சிபுரத்தில் செப்.28-ல் திமுக பவள விழா பொதுக்கூட்டம்

-

காஞ்சிபுரத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுகூட்டததில் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதன்படி, இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன்,ஸ் ரீதர் வாண்டையார், பொன்.குமார், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

MUST READ