Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

-

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!

திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, ஆரணி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. 21 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார்.

"சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!
இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-03-2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ