spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. எம்.பி.க்கு ஆளுநர் மாளிகை கண்டனம்!

தி.மு.க. எம்.பி.க்கு ஆளுநர் மாளிகை கண்டனம்!

-

- Advertisement -

 

we-r-hiring

அரசுப் பணத்தைக் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் பயன்படுத்தியதாக தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறியிருந்தது ஆதாரமற்றது, பொய்யானது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

இது தொடர்பா தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளச் செய்திக் குறிப்பில், “கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆம் தேதிகளில் உதகை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியின் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான முழு செலவையும் ஆளுநர் ஏற்றார், ஆளுநர் மாளிகையின் பணம் செலவிடப்படவில்லை.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். தனியார் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அரசு வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. விருந்தினர்களுக்கு டீ, காபி வழங்கக் கூட ஆளுநர் மாளிகை சமையற்கூடம் பயன்படுத்தவில்லை. நிகழ்ச்சிக்கான மின் வசதி மற்றும் அலங்காரப் பூக்கள் ஏற்பாடு தனியார் மூலம் சொந்த செலவில் செய்யப்பட்டது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

ஆளுநர் மாளிகையின் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ