Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

-

 

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.

‘மக்களவைத் தேர்தல் 2024’- வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்….வேட்பாளர்களின் கவனத்திற்கு!

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்; நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்; நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் ரத்து; சிலிண்டர் விலை ரூபாய் 500; பெட்ரோல் ரூபாய் 75, டீசல் ரூபாய் 65 விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; நாடு முழுவதும் உள்ள மகளிருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

இன்று வெளியாகிறது தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்!

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்; நாடு முழுவதும் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்துள்ளார்.

MUST READ