spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அரசை கண்டித்து மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசை கண்டித்து மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காத மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்” கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது, “தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும்” என்றும்; அத்துடன் ‘மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் 100 நாள் ஊதியம் ரூ.319 ஆக உயர்வு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, “மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேற்று அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் – தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை அனைத்து திமுக ஒன்றியங்களிலும் தலா 2 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

மாவட்ட நிர்வாகிகள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ