Homeசெய்திகள்தமிழ்நாடுதிரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்

திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்

-

திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

Tamil News Live Today: மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்... இரு சமூக மக்களும் விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது அதே ஊரை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்குள் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் (வன்னியர்) பட்டியலின இளைஞர்கள், பெண்களை தாக்கியுள்ளனர்.

இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடனும் மாவட்ட நிர்வாகத்தினர் 8 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

seal

பட்டியலின சமூகத்தினரை கோயிலுக்கு அனுமதிக்க முடியாது என மற்று சமூகத்தினர் கூறியதால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இருசமூகத்தினர் இடையே பிரச்சனை நீடித்ததால் கோயிலுக்கு சீல் வைத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வழிபாடு பிரச்சனை தொடர்பாக இரு சமூகத்தினரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைப்பாடு குறித்து 9-ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விளக்கம் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

MUST READ