Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் - துரைமுருகன்!

கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் – துரைமுருகன்!

-

"யாசகம் கேட்கவில்லை; நீரை கேட்கிறோம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
Video Crop Image

கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நம்முடைய ஒப்புதல், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலந்தி ஆறு, முல்லைப் பெரியாறு, மேகேதாட்டு அணை உள்ளிட்ட எந்த அணையிலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், ஒரு செங்கல் கூட எடுத்துவைக்க முடியாது. தமிழக அரசை கேட்காமல் முல்லைப்பெரியாறிலோ, மேக தாதுவிலோ அணை கட்டவே முடியாது. பிரதமர் தியானம் பண்ணுவதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை.. 1ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் ஒரு இம்பேக்ட் இருக்கும்.. இது தேர்தல் விதியை மீறிய செயல். குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி காந்தியை படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தெய்வப்பிறவி என்பதால், சாதாரண மக்கள் நாம் கூறுவது அவர் காதில் விழாது.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் காந்தி, நேரு படமில்லை. காந்தி, நேருவை மறைத்த ஆளுநருக்கு இதை பேச தகுதி இல்லை” தியாகிகளை நாங்கள் மறைத்ததாக ஆளுநர் கூறுகிறார். ஆனால் அதை மறைத்தது அவர்தான். என இவ்வாறு பேசினார்.

 

MUST READ