மின் கட்டண விகிதம் 01-07-2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யுனிட்டு வரை பயன்படுத்துபவர்களுக்கு 4.60 காசு யுனிட் ஒன்றுக்கு பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 4.80 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 401 யுனிட் முதல் 500 யுனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 காசு பெறபட்டு வந்தது. தற்போது 6.45 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யுனிட் வரையில் ஏற்கனவே 8.15 காசு பெறபட்டது. தற்போது 8.55 காசாக உயர்த்தபட்டுள்ளது. 601 முதல் 800 யுனிட் வரையில் ஏற்கனவே 9:20 காசு யுனிட்டுக்கு பெறப்பட்டது. . தற்போது 9.65 காசாக உயர்த்தபட்டது.

801 முதல் 1000 யுனிட் வரையில் முன்பு 10:20 காசு வசூலிக்கப்பட்டது. தற்போது 10:70 காசாக வசுலிக்கபட உள்ளது. 1000 யுண்ட் க்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.25 காசு வாங்கபட்டு வந்தது. இனி 11.80 காசாக வசூலிக்கபடும். வணிக பயன்பாட்டிற்க்கு 50 கி.வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 9.70 காசு, வாடகை ஒரு கிலோ வாட்டிற்க்கு 307 ரூபாய் வசூலிக்கபட்டு வந்தது. தற்போது யுனிட் ஒன்றுக்கு 10.15 காசு ஆக உயர்த்தியும், வாடகை ஒரு கிலோ வாட்டுக்கு 322 ஆக உயர்த்தபட்டுள்ளது. 112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 562 ரூபாய் வாடகையாக வசூலிக்கபட்டு வந்தது. தற்போது 589 ரூபாயாக வசூலிக்கபட உள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்ககுக்கும் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது.