spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் விடுமுறை எதிரொலி... உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கம்!

தொடர் விடுமுறை எதிரொலி… உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கம்!

-

- Advertisement -

சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மகிழ வசதியாக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயிலும், நாளை மறுநாள் மற்றும் வரும் ஆகஸ்ட் 25 ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு மலை ரயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறுமார்க்கத்தில் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். இதேபோல், ஊட்டி – கேத்தி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,.

MUST READ