- Advertisement -
இன்று இரவு அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ்
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.26) இரவு சந்திக்கிறார்.

தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது. இந்த சூழலில் இரண்டு நாள் பயணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். சென்னையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு புறப்படுகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்க முடிவு செய்துள்ளார். நேரம் கிடைத்தால் பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையின் கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர்களை திரும்ப பெற்றது. இந்த சூழலில் பாஜக தலைமையை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார்.


