Homeசெய்திகள்தமிழ்நாடு‘இரட்டை தலைமைக்கு' தேர்தல் ஆணையம் அழைப்பு

‘இரட்டை தலைமைக்கு’ தேர்தல் ஆணையம் அழைப்பு

-

- Advertisement -

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

eps ops

we-r-hiring

அதிமுக ஏற்கெனவே ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அதிமுகவில் தங்களது பலத்தை நிரூபிக்க இரு தலைமையும் போட்டிப்போட்டு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அரங்கேற்றிவருகின்றன. அதிமுகவில் பொதுக் குழு உறுப்பினர்களால் தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் தனக்கே அதிகாரம் என எடப்பாடி பழனிசாமி கூறுகின்றார். ஆனால் பன்னீர்செல்வம் அதிமுக விதிகளின்படி பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், பொதுக் குழு உறுப்பினர்களுக்கு இதில் வேலை இல்லை எனக் கூறி வருகிறார்.

இதனிடையே 2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் அனுப்பிய ஆவணங்களை 03.10.2022 அன்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான செயல் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு ஈபிஎஸ் அளித்த கட்சியின் வரவு, செலவு கணக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றிருந்த நிலையில் இரட்டைத் தலைமை எனக் குறிப்பிட்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்

MUST READ