spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல - இபிஎஸ் பேட்டி!

தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல – இபிஎஸ் பேட்டி!

-

- Advertisement -

"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

 

தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கிறார்கள். பூத் வாரியாக பிரித்து பண மழை பொழிந்து ஜனநாயக படுகொலை நடைபெறும். என இவ்வாறு அவர் பேசினார்.

 

 

MUST READ