Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு இடைத்தேர்தல்- மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

-

- Advertisement -

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 238 வாக்கு சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்கு பதிவு இயந்திரங்களின் யூனிட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இரு தினங்களாக நடைபெற்ற நிலையில் இன்று வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்கு பதிவு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 286 இயந்திரங்களில் 5% இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதன் செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ஒவ்வொன்றிலும் ஆயிரம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கும் பணி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின் சின்னம் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட உள்ளன. தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இந்த இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ