Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

-

- Advertisement -

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில் – திடீர் பிரேக்காள் இருவர் பலி.!

ஈரோடு-நெல்லை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அந்த ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் ஈரோடு-நெல்லை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு-நெல்லை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மார்க்கத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஈரோடு-நெல்லை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் இருந்து ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 2.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ