spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை

-

- Advertisement -

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இளங்கோவன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

we-r-hiring

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கு இதயத்தில் ரத்த நாளங்கள் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

MUST READ