Homeசெய்திகள்தமிழ்நாடுஎழிலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

எழிலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

-

 

சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இன்று (டிச.20) காலை 11.00 மணிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுச் செய்தார். அப்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகளை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

அதைத் தொடர்ந்து, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?

பின்னர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சிறப்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், தாமிரபரணி ஆறு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து போன்றவைக் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

MUST READ