spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

-

- Advertisement -

ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல் ஒன்றாம் தேதி 29 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் ஒன்றாம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.

No Toll Plazas in India in the next 6 months: Know all about it here

சுங்கக்கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்க கட்டண நிர்ணய விதிகளில் ஒன்றிய அரசு வழிவகை செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 10 முதல் 15 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டிலும் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதன்படி, தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

MUST READ