spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"விவசாயிகள் மீது குண்டர் சட்டம்"- அண்ணாமலை கண்டனம்!

“விவசாயிகள் மீது குண்டர் சட்டம்”- அண்ணாமலை கண்டனம்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் விவசாயிகளை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் தி.மு.க. அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.

உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!

தி.மு.க. அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச தி.மு.க. அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளைப் பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழக பா.ஜ.க. வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ