Homeசெய்திகள்தமிழ்நாடுமகா சிவராத்திரி: பிப்.18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு விடுமுறை

மகா சிவராத்திரி: பிப்.18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு விடுமுறை

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வரும் பிப்ரவரி 18-ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Image

we-r-hiring

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் என்னும் ஆன்மிக நிகழ்வு குமரி மாவட்டத்தில் நடப்பது வழக்கம். இதற்காக உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை (பிப்ரவரி 18) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களுடன் செயல்படும். உள்ளூர் விடுமுறை நாளுக்கு ஈடாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி வேலை நாளாக இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ