
நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில், பைனான்ஸியர் அழகப்பன் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவுப் பெற்றது. ஆய்வுச் செய்யப்பட்ட அறைகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!
பா.ஜ.க.வில் இருந்து விலகிய கௌதமி தனது சொத்துகளை காரைக்குடியைச் சேர்ந்த பைனான்சியர் அழகப்பன் மோசடி செய்ததாக அளித்த புகார் குறித்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியையும், காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!
நேற்று (அக்.31) நண்பகல் தொடங்கிய அந்த பணி நள்ளிரவில் நிறைவுப் பெற்றது. அதன் பின், சோதனைச் செய்யப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், முக்கிய ஆவணங்களை சென்னை காவல்துறை கைப்பற்றியுள்ளனர்.