spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி உருவாக்கத்திற்கு ‘டிட்கோ’ நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில் விமானத்தை இயக்க, பயிற்சி பெற்ற விமானிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

we-r-hiring

இந்த பயிற்சியை அளிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் வெகு குறைவாகவே உள்ளன. அதனால், விமான பயிற்சி பெற விரும்புவோர் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து நாடுகளுக்கு செல்கின்றனர். எனவே, தமிழகத்தில் விமான பயிற்சி நிறுவனங்களை உருவாக்க, டிட்கோ திட்டமிட்டு உள்ளது.

பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா

தொடர்ந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆப்ரேட்டரை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது.

ஓடுதளத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளை டிட்கோ நிறுவனம் மேற்கொள்ளும்.

தேர்வு செய்யப்படும் ஆப்ரேட்டர் நிறுவனம் விமான பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக டிட்கோ மற்றும் தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என டிட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ