spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

-

- Advertisement -

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. ஏராளமான வீடுகள் மழை, வெள்ளத்தினால் சேதமடைந்தன. மழை வெள்ளத்திற்கு இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

we-r-hiring

இந்த நிலையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ