spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

-

- Advertisement -

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

we-r-hiring

தேர்தல் பரப்புரையின் போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த புகார்கள் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம், காவல்துறையினரிடம் இந்த விவகாரங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆர்த்திக்கு பணம், அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!

இதனிடையே, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே கூட்டம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ