நில மோசடியில் ஈடுபட்டதாக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ஒரு நிலத்தை வாங்கும் போது, பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கார்த்தி மற்றும் தமிழரசு ஆகியோர் நிலத்தின் சர்வே எண்ணை மறைத்து மோசடியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வரதராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே முறையீட முடியும் எனக் கூறி, வழக்கை ரத்துச் செய்து உத்தரவிட்டார்.