
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தமிழக விளையாட்டுத்துறைச் சார்பில் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையில் வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதன்முறையாக இரவில், Street ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
தீவுத் திடலில் தொடங்கி ஓமந்தூரார் மருத்துவமனை, நேப்பியர் பாலம் வழியே 3.5 கி.மீ.க்கு போட்டி நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.