spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது- ஜி.கே.வாசன்

ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது- ஜி.கே.வாசன்

-

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது- ஜி.கே.வாசன்

ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் உயிரிழந்த பட்டு கைத்தறி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் ஒப்பிலியப்பன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராயா கோவிந்தராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கும்பகோணம் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

we-r-hiring

அப்போது பேசிய ஜி.கே.வாசன், “ ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தி அறிவித்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை குறைக்க வேண்டும். விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் நலன் காக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரால் சுடப்பட்ட தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் வகையில் நல்ல சூழல் உள்ளது” எனக் கூறினார்.

MUST READ