Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து உயரும் தங்கம் விலை!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து 40 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold jewellery
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்ற போதிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதே காரணம் என தெரிவிகிறது. கடந்த 21 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை நெருங்கியதை அடுத்து தற்போது சற்று குறைந்தது.

we-r-hiring

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 5,115-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் அதிகரித்து ரூ.74,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ