சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹45,600க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை குறைந்தாலும், விலை உயர்வு என்பது அதிரடியாகவும், அதிகளவிலும் இருந்து வருவது இல்லத்தரசிகளை சற்று கலக்கமடையச் செய்து வருகிறது. அண்மையில் கூட ( டிசம்பர் 2ம் தேதி) ஒரு சவரன் ரூ.47,000 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் மீண்டும் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.45,760க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் ( டிச.13) தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. அந்தவகையில் 22 ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.45,600க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ20 குறைந்து ஒரு கிராம் 5,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்திருக்கிறது. அதன்படி சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77க்கு விற்பனையாகிறது.