
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது குறைவதும், உயர்வதுமாக போக்கு காட்டி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடப்பாண்டு மட்டும் சுமார் 39 முறை தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து எப்படியும் ஒரு சவரன் ரூ, 60 ஆயிரத்தை தொட்டுவிடும் என எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க தேர்தல் முடிவுகளால் சர்வதேச சந்தை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. கடந்த வாரங்களில் தங்கம் விலை கணிசமாக சவரனுக்கு ரூ.2,720 வரை குறைந்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயரத்தொடங்கிவிட்டது.
அதன்படியே நவ.15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்த நிலையில், நவ.16ம் தேதி ரூ.80 குறைந்தது. பின்னர் நவ.80ம் தேதி 480 ரூபாயும், நேற்றைய தினம்(நவ.19) 560 ரூபாயும் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 மேலும் அதிகரித்து , ஆபரணத் தங்கம் விலை ரூ.57,000ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,115க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.