
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாயும், கிராமுக்கு 15 ரூபாயும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720 விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,840க்கு விற்பனையானது. சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் வெள்ளிக் கிழமை விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.46,760க்கு விற்பனையானது.

இந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக சென்னையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாயும், கிராமுக்கு 05 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதாவது இன்று தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.46,880க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்ததை போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.78க்கும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து ரூ.78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.



