spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இதே குற்றச்சாட்டிற்காக திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் சவுக்கு சஙகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக கோரி சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளும் ஒரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. மேலும் 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது

we-r-hiring

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை
இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார். அப்போது, சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே அவர் மேல் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

MUST READ