Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளர் மீது புகார்

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளர் மீது புகார்

-

- Advertisement -

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.

statement

we-r-hiring

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்துக்கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்து உரையாற்றினார். அதுமட்டுமின்றி அவை நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன் ஆளுநர் வெளியேறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது என தனது கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் விருகம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் குறித்தும் அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தகாத வார்த்தைகளால் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்தியன் பீனல் கோடு 124 மற்றும் 1870-ன் படி சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஆளுநரை அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் தரப்பிலிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ