spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

-

- Advertisement -

சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

சென்னை ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதான தர்மம் மற்றும் பாரதம் என்ற நாடு உருவாவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர்தான் சனாதன தர்மம். பாரதத்தையும், சனாதனத்தையும் பிரிக்க முடியாது. சனாதனத்தில் பிரிவுகள் உள்ளது, வேறுபாடுகள் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும். சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.

சனாதன தர்மம் இந்த உலகமே ஒரு குடும்பம் எனக் கூறுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவுக்கு வாய்யுப்புள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மீகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. உலகம் முழுவதும் உள்ள பல பிரச்சனைகளுக்கு இந்தியாவில் தீர்வு உள்ளது. சனாதன தர்மம் உருவாக தமிழ்நாடு முக்கிய காரணமாக இருந்துள்ளது. சனாதன தர்மத்தை விளக்க முடியாது. சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. பல ஆண்டுகளாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு தமிழ்நாடு. சனாதன தர்மம் தனித்துவமானது. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 10ஆயிரம் ஆண்டுகளாக சனாதன தர்மம் வாழ்கிறது” என்றார்.

MUST READ