Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

-

- Advertisement -
kadalkanni

மதுரையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரில் காணவுள்ளதாக மகிழ்ச்சியில் பேட்டியளித்தனர்.

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

மதுரையை சேர்ந்த 9 மாநகராட்சி, ஒரு அரசு பள்ளி என 10 மாணவர்களை ரோட்டரி கிளப் தொண்டு நிறுவனம் தேர்வு செய்த நிலையில் இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

மேலும் அவர்களை மெட்ரோ ரெயில் மூலம் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்கள், ஏற்பாட்டாளர்கள் உற்சாகமாக பேட்டியளித்தனர். மாணவர்கள் பேட்டியில் வீட்டு வாசலில் நின்று வானத்தில் விமானத்தை பார்த்து அசந்த தங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் என்பதால் ஊக்களிக்கும் விதமாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டு சட்டமன்றத்திற்கும் மெட்ரோ ரெயிலில் அனுப்பி பார்வையிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோல் நாடாளுமன்றத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்திற்கு சிறப்பு விருது (apcnewstamil.com)

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது 9 மதுரை மாநகராட்சி பள்ளி ஒரு அரசு பள்ளி மாணவர் என 10 பேரை ரேண்டம் முறையில் தேர்வு செய்தோம். இதற்காக ரோட்ரி கிளப் ரூ.1,30,000 செலவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க இதுபோல் பல்வேறு செயலில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார்.

MUST READ