spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிருதுநகர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!

விருதுநகர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பனையடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பனையடிபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டியன் கடந்த 12 ஆண்டுகளாக 8-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அவருடைய வகுப்பில் படிக்கும் தன்னுடைய மாணவியின் அம்மா செல்போனுக்கு ஆபாச வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி அந்த மாணவிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தங்கபாண்டியன் மீது மாணவியின் அம்மா சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சாத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் புகாரில் உண்மைத் தன்மை இருந்ததை அடுத்து ஆசிரியர் தங்கபாண்டியினை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவமானது சக ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ