
ராமர் -சீதாவை இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிகப்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். அவர் மேலும் இந்த விவகாரத்தில் ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.

திரைப்பட இயக்குநர் ரஞ்சித், தன் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தை இழிவுபடுத்தி காட்சிகள் அமைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் .
திரைப்படங்களில் இந்து மதத்திற்கு எதிரான இவரது வெறுப்பு பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சியினர் கண்டிக்கவில்லை. இவற்றை இந்துக்கள் பெரிதாக கண்டு கொள்ளாத காரணத்தால் ரஞ்சத்தின் உதவி இயக்குனரும் அதே வேலையை செய்கிறார்.

கவிதை என்கிற பெயரில் 125 கோடி இந்துக்களின் இதயத்தில் வாழும் ராமபிரானை சீதா தேவியை மிகக் கேவலமாக பேசியுள்ளார் விடுதலை சிகப்பி. இதே இஸ்லாமிய, கிறிஸ்தவ கடவுள்களை பேசியிருந்தால் தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. விடுதலை சிகப்பியின் இந்த செயலுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வன்மையாக கண்டித்து இருக்கிறார்.
விடுதலை சிகப்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கிறது இந்த முன்னணி. இந்து கடவுள்களை இழிவு படுத்தும்போது எந்தெந்த அரசியல் கட்சிகள் மௌனம் காக்கிறது. அவர்களின் முகமூடியை மக்களின் முன் இந்து முன்னணி கிழித்துக் காட்டும். இந்து மதத்தை இழிவு படுத்துவதை கண்டிக்காத கட்சிகளுக்கு இந்துக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.


