Homeசெய்திகள்தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு!

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு!

-

- Advertisement -

தீபாவளி திருநாள் அன்று பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தீபவளி அன்று பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

tamilnadu assembly

அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

"தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்" என அறிவிப்பு!
File Photo

இதேபோல், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

MUST READ