Homeசெய்திகள்தமிழ்நாடு"வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு"- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

“வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

-

 

"வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு"- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
Video Crop Image

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்குமா?

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியாவது, “நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. நெல்லையில் விரைந்து தண்ணீர் வடிந்துவிடும்; தூத்துக்குடியில் மழைநீர் வடிய சற்று தாமதம் ஏற்படலாம். வரலாறு காணாத மழைப்பொழிவால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!

ஒரு சில பகுதிகளில் மேகவெடிப்பு அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கை அடிப்படையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ