spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'ஆடு- கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள்' - விஷமப் பேச்சால் பாஜக ராம.சீனிவாசனுக்கு சிக்கல்..!

‘ஆடு- கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள்’ – விஷமப் பேச்சால் பாஜக ராம.சீனிவாசனுக்கு சிக்கல்..!

-

- Advertisement -

மத வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் மீது பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.'ஆடு- கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள்' - விஷமப் பேச்சல் பாஜக ராம.சீனிவாசனுக்கு சிக்கல்..!பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் த டிபேட் என்ற youtube சேனலுக்கு கொடுத்த  ஆடு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என்று சமய வேறுபாடு பார்க்காமல் மத நல்லிணக்கத்துடன் இருக்கும் மக்களை இழிவுபடுத்தி பேசி உள்ளார். எனவே ராம சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்து முன்னணியால் கொண்டுவரப்பட்ட முதல் மதவெறி பாடல் யூடியுப் யில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் . “கருணையே இல்லாமல் களத்திற்கு வாடா ” என கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட இஸ்லாமியர்கள் மீது கொலை வெறியை தூண்டுவதாகவும் கலவரத்திற்கு வா என்று அழைப்பதாகவும் இரண்டாவது பாடல்  உள்ளது. இந்த மதவெறி பாடல் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை தடை செய்யப்படவில்லை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

we-r-hiring

இப்பாடல் உடனே தடை செய்யப்பட வேண்டும் என்றும் இப்பாடலை எழுதியவர், பாடியவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.  தொடர்ந்து சமூகத்தில் மத மோதலுக்கான பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்து முன்னணியின் தலைமை நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் டிஜிபி  அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்- ராகுல் காந்தி ஆத்திரம்

MUST READ