
தமிழக வெள்ளப் பாதிப்பு நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை பாதிப்பால் தமிழகத்தின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசிடம் 37,907 கோடியே 19 லட்சம் ரூபாய் கோரியுள்ளதாகவும், வெள்ளச் சேதங்களை மத்தியக் குழு மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆய்வுச் செய்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்….. எந்த படத்தில் தெரியுமா?
தமிழக அரசு கோரியுள்ள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.