மதுரை மாவட்டம் நத்தம் பறக்கும் பாலத்தில் மோதி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பெத்தன்யாபுரம் மூலப்பிள்ளை தெருவச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் மதுரை கல்லந்தெடியில் உள்ள அவரது நண்பரின் கிணற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பறக்கும் பாலத்தில் அதிவேகமாக பைக்கை ஒட்டிவந்துள்ளனர். அவர்களின் பைக்கானது நத்தம் பறக்கும் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் ஆனந்த கிருஷணன் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சீனிவாசன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பாலத்தின் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அறிந்த தல்லாக்குலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை நத்தம் பறக்கும் பாலம் பக்கவாட்டுச் சுவர் சிறியதாக இருப்பதாகவும்,பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததாலும் விபத்து அடிகடி ஏற்படுவதாகவும் பொது மக்கள் கூறுகினறனர்.
மேலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் பைகி ரேஸ் நடப்பதாகவும் அதனால் விபத்து ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.