நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வா் உரையாற்றினாா்.
சென்னை: நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவற்றை சிறப்பான இடைக்கால பட்ஜெட் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார். அவ்வுரையில், “இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் வேகமாக பணிகளை முன்னெடுத்து தொடர்வோம் என்றும் நம்பிக்கை உள்ளது. “எனக்கு தரப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளேன்” .
வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் முன்னர் இருந்த பலரும் இன்று இல்லாவிட்டாலும், அவர்கள் அனைவரும் போற்றத்தக்கவர்கள். பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, கடமை தவறாமை ஆகிய பண்புகளை கடைப்பிடித்துள்ளோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே நாளைய ஆட்சியாளர்களாக எங்களைத் தொடர்ந்து செயல்பட வைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தின் மூலம் இன்னும் வலிமையுடன் தமிழ்நாட்டை உயர்த்த செயல்படுவேன். “நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை நான் பெற்றுள்ளேன்” என்று கூறினாா்.

மேலும், “சுயமரியாதை சீண்டப்பட்டால் எதிர்குரல் கொடுக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன்” . குறைகளைச் சொல்வோர் நம் முன்னேற்றத்துக்கு சிறகுகள் தருபவர்கள் என எதிர்க்கட்சிகளை பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து சமூகத்தினரும் வாழ்வில் உயர்வு பெற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையே ஆட்சிக்கு வந்தோம்; 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சமச்சீரான வளர்ச்சியை அடைந்துள்ளது. “எங்கள் சாதனையை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 அமையும். இன்னும் உழைக்க காத்திருக்கிறேன்” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலனின் உரையாற்றினார்.
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி


