spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஊழலற்ற புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் - சாமிநாதன்

ஊழலற்ற புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் – சாமிநாதன்

-

- Advertisement -

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன் பதவி விலகிய நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊழலற்ற புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் - சாமிநாதன்மேலும், அதில், “கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், எனக்கு பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கெஞ்சிய நிர்மலா! மிஞ்சிய செங்கோட்டையன்! பதறும் எடப்பாடி!

MUST READ